Wednesday, 30 September 2015

Tamil Jokes (Vol 3)

அப்பா இங்க வந்து பாருங்களேன்...

அம்மா வச்ச குழம்பக் குடிச்சிட்டு மீனெல்லாம் செத்துக் கிடக்குது சட்டிக்குள்ள!!

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

யாருக்காவது குழிதோண்டவும் மண்ணள்ளிப் போடவும் விரும்பினால் அதை விதைகளுக்குச் செய்யுங்கள்....

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

பிய்த்து எடுத்தாலும் பீரோவை விட்டு வர மறுக்கும் சக்திமான் ஸ்டிக்கரில் ஒட்டியிருக்கிறது என் பால்யம்...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

உச்சிக்குப் போய்விட்டால் எல்லாப்பக்கமும் சரிவுதான்...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

ஆம்பளைங்க பண்ற தண்டச்செலவுல  மறக்கமுடியாதது கல்யாணத்துக்கு
வாங்குன கோட்டு... எப்பப் பாத்தாலும் எரிச்சலா வேற இருக்கும்..

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

இனி ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு இப்படி கடிதம் எழுதுவார்... 

"இங்கு நான் நிலத்துடன் இருக்கிறேன், அங்குநீ நிலத்துடன் இருக்கிறாயா என அறிய ஆவல்"

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

நம் புகைப்படத்தைப் பார்த்து "ஆ!... இது யாரு!" என திகைப்பதன் சுருக்கமே ஆதார்..

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

ரெய்னாவுக்கு 28 வயசுதான். கல்யாணம் முடிஞ்சுடுச்சுன்னு அம்மாகிட்ட சொன்னேன். அவன் சம்பளம் எவ்வளவுன்னு டான்னு பதிலுக்குக் கேக்கறாங்க..

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

ஒரு உண்மையில் சமாதானம் ஆகாமல் பல பொய்களால் சமாதானமடைபவள் மனைவி...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

பிளாட்பார டிக்கெட் பத்து ரூபாய்க்கு  வாங்கியே பிளாட்பாரத்துக்கு வந்துடுவோம் போல..!! 

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

பிளாட்பாரத்துல நின்னாதான் கட்டணம்  10 ரூபாயாம். அப்படியே கீழ உக்காந்துட்டா கேட்கமாட்டாங்களாம். பிச்சைக்காரன் சொன்னான்...

 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

தொட்டாச் சிணுங்கியைத் தொட்டு விளையாடிய குழந்தையின் கரங்கள்
இன்று தொடு திரையில் சிக்கிக் கொண்டன...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

ஒரு கிரகத்துக்கு விஸ்வநாதன் ஆனந்த்ன்னு பேர் வச்சிருக்காங்களாம்...எனக்கு எங்கவீட்ல 'கெரகம்' ன்னு பேர் வச்சு ரொம்ப வருஷமாச்சு...
 
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

மழுங்கிப் போன அப்பாவின் கண்ணாடியை அணிந்தபோது பூதாகரமாகத் தெரிந்தது, எங்களுக்காகத் தொலைத்த வாழ்க்கை.!! 

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

உன் அப்பா ஏழையென்றால் அது உன் விதி.

உன் மாமனார் ஏழையென்றால் அது உன் இளிச்சவாய்த்தனம்...

*****************

ஒருவன் ஒரு காக்கா வளர்ந்தான்.

Atha touch panna romba smootha softa irrukum....

அவன் அதற்கு என்ன பெயர் வைப்பான்.

MI-CRO-SOFT

***************** 

Why do முனிவர்கள் have so much resistance to wordly pleasures??

Coz they keep chanting ohm ohm ohm...which is the unit of resistance.

எப்படி நம்ம physics??

*********************** 

90 பாவம் (sin) செய்தால் 45 தடவை மாட்டிப்பாங்க. எப்படி ??

Sin90=cot45

*********************

How do ஈக்கள் (flies) communicate with each other?
Eee-mail

********************

யானையும் and எறும்பும்  classmates. Elephant was a regular student but erumbu was an absentee. Why?

Because that was a cut'erumbu (கட்டெறும்மபு)

********************

"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"
"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."

******************** 
நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்.. செய்யணும்

டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்.. காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார்.
********************** 

நீதிபதி: ஒரே வீட்டை ஏன் பதினைந்து முறை கொள்ளை அடிச்சே?
திருடன்: ஐயா நான் அவங்க பாமிலி திருடன், எப்புவுமே விஸ்வாசமா இருப்பேன்.
***********************

காதலிக்கும் மனைவிக்கும் என்னங்க வித்தியாசம்?”

கவிஞர்:- “ காதலி கரும்பைப்போன்றவள்.  மனைவி இரும்பைப்போன்றவள்
********************** 

ஆவி1 :விஷம் குடிச்சி சாக போனேன்.. விஷத்துல கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்..
ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?

ஆவி1 :காப்பாத்த மருந்து கொடுத்தாங்க..மருந்துல கலப்படம் செத்துட்டேன்..
**************************

டீச்சர்: நாம் பேசும் மொழியை ஏன் தாய் மொழி என்று சொல்கிறோம் ?
மாணவி : எப்போதும் அம்மாக்கள் பேசுவதாலேயும், அந்த வாய்ப்பு அப்பாக்களுக்கு குறைவாக கிடைப்பாதலேயும், நாம் பேசும் மொழி தாய் மொழி என்று அறியப்படுகிறது.

************************
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

நோயாளி -"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

******************
பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..

பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.
‪‎செத்தான்டா_சேகரு

******************** 
''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''

''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?
*******************
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
*********************
நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" 
"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.

No comments:

Post a Comment