கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு
அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..
***********************
ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு
சொல்லுமா.
--------------------------------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால
கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு...."SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
*****************************
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக்
சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
--------------------------------------------------------
நர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க
இருப்பார்போல தெரியுது டாக்டர்!
டாக்டர்: எப்படி சொல்ற?
நர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..?
------------------------------------------------
மனைவி: ”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
கணவன்:”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா
இருக்கும்.
-----------------------------------------------
ஒருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா என் கூட ஒரு வாரத்துக்கு
பேச மாட்டாள்.
மற்றொருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா கையில எது
கிடைக்குதோ அத என் மேல வீசி அடிப்பா.
மூன்றாமவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே என்னோட சட்டைய
துவைக்க ஆரம்பிச்சிடுவா.
மற்ற இருவரும்: ஆச்சரியமா இருக்கே ... ஏன் அப்படி?
மூன்றாமவர்: அந்த சட்டைய நான் போட்டுக்கிட்டு இருக்கும்
போதே அத அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.
-----------------------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக்
கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
-----------------------------------------------
அன்றோரு நாள்.....
-ஒரு மாலை வேளை.....
-ரயில்வே ஸ்டேஷன் அது.......
_நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே......
_நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது.......
_உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்.......
_அப்போது தான்....
_அப்போது தான்....
_அந்த வார்த்தையை நீ சொன்னாய்......
_அய்யா...... தர்மம் போடுங்க சாமி......
----------------------------------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி
பாக்குற அளவுக்கு!!!
-----------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
----------------------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம்
வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
----------------------------------------------
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு
இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை
பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா? அவன் யாருக்கும்
எதுவும் தரமாட்டன்
-----------------------------------------------
ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம்.
அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது....
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்?
ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டஇருந்து கடன் வாங்கணும்னு
சொன்னன். நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான்
தலைமை ஆசிரியர் :?!?!
-----------------------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
-----------------------------------------------
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே
வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
------------------------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது..
ஏன்னா.. ??கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
------------------------------------------------
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப்
போட்டுட்டாராம்:(
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு
இருக்குலே..
மனைவி: ????
--------------------------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டொக்டர்
டொக்டர் - அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க
-------------------------------------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு
ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர்
வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
--------------------------------------------------
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர்
நடந்து வருகிறேன்.
ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி
இருக்கலாமே?
--------------------------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி
கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
--------------------------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம்
எதுக்கு இருக்கோம்?"
-------------------------------------------------
நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே
முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு
சொல்லுங்க. என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
-------------------------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
------------------------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும்,
எதைப்
பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது
மருந்து குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
-----------------------------------------------
என்ன இது? ஒரு காலில்
பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக்
கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு
ஜோடியும் இருக்கிறது.
------------------------------------------------
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?"
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க..
அதான்!"
-------------------------------------------------
கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????
-------------------------------------------------
''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''
''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''
''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''
''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''
-------------------------------------------------
" இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா? "
" இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி,
வேறே
ஏரியாவுக்குப் போயிட்டதாலே,அவங்களும் அந்த
ஏரியாவுக்கே போயிட்டாங்க "
---------------------------------------------------
அந்த கோயில்
மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்? "
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.