*சாவியை நான்
தொலைத்துவிட்டு, தண்டனையை
பூட்டுக்குக் கொடுத்தேன்…
*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம். ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!
*வாசிக்காமல்
வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச்
செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!
*எல்லாரையும்
நம்புங்க, துரோகம்
பழகிடும். யாரையுமே
கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை
தானா வந்துடும் !!*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம். ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!
*உயர உயரத்தான்
நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!
*பொருத்தமில்லாத
ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!
*ஒவ்வொரு
கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள
முடியாத ,ஆனாலும்
அழித்துவிட மனமில்லாத எண்கள்!
*நேற்று வைத்த
வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது
வருவது இல்லை!!
*சதுரங்கத்தில்
கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!
*‘சரியாக் கேட்க
மாட்டேங்குது, அப்புறமாப்
பேசுறேன்’ என்பது மட்டும்
சரியாக் கேட்டுவிடுகிறது!
*சிறு வயதில்
ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது
No comments:
Post a Comment