Friday, 25 September 2015

Tamil Jokes (Vol 2)

If your husband sends you romantic messages, then be very happy…

but think who is sending those messages to your husband ?
My job is over ....

நாராயனா....நாராயனா....

***********************

காதலுக்கும் நட்புக்கும் என்ன வித்தியாசம் ?
காதல் என்பது சிக்ஸ்பேக் மாதிரி…!
ஒழுங்கா மெயின்டெய்ன் பண்ணலைன்னா போயிடும்

நட்பு என்பது தொப்பை மாதிரி
ஒரு தடவை வந்துச்சுன்னா, போகவே போகாது..!

------------------------------------------------

ஹலோ! சார் உங்க கிட்ட பேசணும் நேர்ல வரமுடியுமா...
நீங்க யார் மேடம் பேசறீங்க ?

என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க.
அய்யோ! அதிர்ச்சியுடன்,

நீங்க விமலாவா...
இல்லை.

கமலாவா...
இல்லை .

ராதாவா...
இல்லை.

ரேகாவா.
இல்லை சார். நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா.
 .
அடச்சே நான் பயந்தே போயிட்டேன்...

*************************

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
 
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?”  என்று கேட்டார்.
 
 
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
 
 
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

 
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
 
 
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
 
 
கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..

***********************

ஹலோ! யார் பேசுறது?

பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...

நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.

--------------------------------------------------------

நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு...."SISTER

நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,

இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."

*****************************

டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க

விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!

--------------------------------------------------------

நர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல தெரியுது டாக்டர்!

டாக்டர்: எப்படி சொல்ற?

நர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..?

------------------------------------------------

மனைவி: நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க

கணவன்:அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்.

-----------------------------------------------

ஒருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா என் கூட ஒரு வாரத்துக்கு பேச மாட்டாள்.

மற்றொருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா கையில எது கிடைக்குதோ அத என் மேல வீசி அடிப்பா.

மூன்றாமவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே என்னோட சட்டைய துவைக்க ஆரம்பிச்சிடுவா.

மற்ற இருவரும்: ஆச்சரியமா இருக்கே ... ஏன் அப்படி?

மூன்றாமவர்: அந்த சட்டைய நான் போட்டுக்கிட்டு இருக்கும் போதே அத அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.

-----------------------------------------------

மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.

கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

-----------------------------------------------

அன்றோரு நாள்.....

-ஒரு மாலை வேளை.....

-ரயில்வே ஸ்டேஷன் அது.......

_நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே......

_நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது.......

_உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்.......

_அப்போது தான்....

_அப்போது தான்....

_அந்த வார்த்தையை நீ சொன்னாய்......

_அய்யா...... தர்மம் போடுங்க சாமி......

----------------------------------------------

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''

எந்த அளவுக்கு பாக்குறாங்க?

''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

-----------------------------------------------

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.

----------------------------------------------

ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது

மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க

----------------------------------------------

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா? அவன் யாருக்கும் எதுவும் தரமாட்டன்

-----------------------------------------------

ஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்?

ஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்னன். நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் :?!?!

-----------------------------------------------

முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?

ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!

முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு

-----------------------------------------------

மருத்துவர்: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.

நோயாளி : ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”

------------------------------------------------

டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...

டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...

------------------------------------------------

மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?

கணவன்: என்னம்மா விஷயம்?

மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:(

கணவன்: ஹும்செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..

மனைவி: ????

--------------------------------------------------

நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டொக்டர்

டொக்டர் - அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க

-------------------------------------------------------------

டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

--------------------------------------------------

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.

ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?

--------------------------------------------------

வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?

கிராமத்தான் : கயிற்றாலே தான்

--------------------------------------------------

"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"

-------------------------------------------------

நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.

டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க. என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.

-------------------------------------------------

அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!

குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?

இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!

------------------------------------------------

"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப்
பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்."

"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."

-----------------------------------------------

 என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக்

கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

------------------------------------------------

எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?"

"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க.. அதான்!"

-------------------------------------------------

கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?

கிரண் : தெரியலியே?

கரண் : சுவரொட்டி - தான்.

கிரண் : ?????????

-------------------------------------------------

''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''

''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''

''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''

''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''

-------------------------------------------------

" இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா? "

" இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே

ஏரியாவுக்குப் போயிட்டதாலே,அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க "

---------------------------------------------------

 அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்? "

அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.

No comments:

Post a Comment