Saturday, 17 October 2015

பெரியவர்களை ஒருமையில் அழைப்பதற்கு மூன்று காரணங்கள்

குட்டிஸ் சில அப்பாவை என்டா அப்பா என அழைப்பதை காண்கிறோம். இப்படி பெரியவர்களை ஒருமையில் அழைப்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

மிகுந்த பாசம், மிகுந்த கோபம், அறியாமை.

ஆனால் காளியை ஒருமையில் அழைத்த மகாகவிகள் இருவர். பாரதத்தின் தென்கோடியில் ஒருவர், வடகோடியில் ஒருவர்.


ஒருவர் பாரதி, சொல்லடி சிவசக்தி ஏன் எனை சுடர் விடும் அறிவுடன் படைத்து விட்டாய் என்றவர்.

மற்றொருவர் காளிதாஸ். 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர். அவர் தலைமை கவியாக இருந்த அரசவையில் அரசர் ஒரு கவிதை போட்டி வைத்தார் . மற்ற இரு கவிஞர்களும் பங்கு பெற்றனர் .

யார் சிறந்த கவி என தீர்மானிக்க, காளியை தீர்ப்பு வழங்க வேண்டுகோள் வைத்தார் அரசர் .
காளி மற்ற இருவரை முதல் , இரண்டாம் இடங்களில் அசரிரியாக  தேர்ந்தெடுத்தாள். காளிதாஸ் கோபத்துடன் ஏன்டீ இப்படி செய்தாய், என் கவிதை தானே சிறந்தது .

அப்போது காளி அசரிரி கூறியது .

நீயே நான் , நீயே நான் , நீயே நான் .

என்னை நானே எப்படி பாராட்டி கொள்ளலாம்.

No comments:

Post a Comment