Saturday, 17 October 2015

களித்தானைக் காரணம் காட்டுதல்

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ அற்று 

கலைஞர் உரை: குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான். 


மு.வ உரை: கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது. 

சாலமன் பாப்பையா உரை: போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

Translation: 

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave. Is he who strives to sober drunken man with reasoning grave. 

Explanation Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

No comments:

Post a Comment