அதுல குரூப்புன்னு உண்டாக்கறாங்க. பள்ளிக்கூட பிரண்ட்ஸ், காலேஜு பிரண்ட்ஸ், பழைய ஆபீசு, புது ஆபீசு, நாடக கோஷ்டி, சினிமா கோஷ்டி, வீட்டுவளாக கோஷ்டி ன்னு ஒரு பத்து குரூப்புல நானு இருக்கேன்.
அதுல தகவல் மட்டும் பரிமாறிகிட்டா பரவால்ல. ஆனா அதுல பாதி வீடியோ, ஜோக்கு, பொன்மொழி. நம்ம மக்களுக்கு அல்லாரையும் திருத்தணும், அல்லாரையும் குஷிப்படுத்தனும்ன்னு ஒரு பெரிய குறிக்கோள் இருக்குது. அதனால எந்த ஜோக்கு படிச்சாலும் எந்த பொன்மொழியைக் கேட்டாலும் படிச்ச கையோட அதை மத்த குரூப்புக்கு ஃபார்வோர்ட் செஞ்சிடறாங்க. எத்தினி தபா ஒரே வீடியோ வைப் பாக்கறது ஒரே பொன் மொழியைப் படிக்கறது ? பொன்மொழியெல்லாம் படிச்சி எவனாவது உருப்பட்டதா சரித்திரம் உண்டா ?
ராக்கெட்ல ஏறி சூரியன் பக்கத்துல போனா அது ஓம் ஓம் நு சவுண்டு உடுதுன்னு ஒருத்தன்.
ஈஸ்ட் இண்டியா கம்பெனி சிவன் பார்வதி படம் போட்டு நாணயம் போட்டாங்கன்னு ஒர்த்தன்.
அங்க இங்க படிச்சதெல்லாம் காந்தி சொன்னாரு விவேகானந்தர் சொன்னாருன்னு அவங்க மேல மூட்டை கட்டி இன்னொருத்தன்.
ஈஸ்ட் இண்டியா கம்பெனி சிவன் பார்வதி படம் போட்டு நாணயம் போட்டாங்கன்னு ஒர்த்தன்.
அங்க இங்க படிச்சதெல்லாம் காந்தி சொன்னாரு விவேகானந்தர் சொன்னாருன்னு அவங்க மேல மூட்டை கட்டி இன்னொருத்தன்.
இம்சை தாங்கல.
அப்பறம், மில்க் பிகிஸ் சாப்டா கான்சர், கீரைல விஷம் கண்ராவிகள் வேற. போதுண்டா சாமி.
இரண்டு நாளைக்கு முன்னால, அமெரிக்கால ரெண்டு சூரியன் உதிச்சதாம்ல, அந்த போட்டோவை எல்லா க்ருப்புலயம் பாத்து பாத்து கண்ல ரெண்டு ஓட்டையே விளுந்திருச்சுப்பா… முடியல.. உட்ருங்கப்பா..
இரண்டு நாளைக்கு முன்னால, அமெரிக்கால ரெண்டு சூரியன் உதிச்சதாம்ல, அந்த போட்டோவை எல்லா க்ருப்புலயம் பாத்து பாத்து கண்ல ரெண்டு ஓட்டையே விளுந்திருச்சுப்பா… முடியல.. உட்ருங்கப்பா..
பி.கு - அமெரிக்கால ரெண்டு சூரியன் உதிக்கறது நியூசு இல்ல. தமிழ்நாட்ல உதயசூரியன் உதிச்சாதான் நியூசு - பஞ்ச் டயலாக் உபயம் பழைய ஆபீஸ் வாட்ஸ் அப் கோஷ்டி நண்பர் .
Kosuru :
சரியா சொன்னீங்க தம்பி. இப்பிடி ரீபீட் குப்பைங்கள தவிர டைய்லீ, குட்மார்ணிங், குட்நைட் (சூரியன் - நிலா போட்டோங்களோட)..,,,,, அல்லாத்யும் பொரும்மயா டிலீட் அட்ச கையோட எலி குட்டி போட்டாப்ல இன்னும் பத்து பைஞ்சு மெஸேஜ் வந்து உய்வுதுங்க.... பேஜார்பா

No comments:
Post a Comment